ஜி 7 தொடர்பாக அமெரிக்காவின் அதிரடி முடிவு.. எரிச்சலில் சீனா.!! - Seithipunal
Seithipunal


பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள நாடுகள் ஜி 7 என்ற அமைப்பை செயல்படுத்தி வருகிறது. இந்த பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகள் இருக்கிறது. இதன் தலைமை பொறுப்பில் அமெரிக்கா இருந்து வருகிறது. 

இந்நிலையில், இந்த அமைப்பை ஜி 11 நாடுகள் என்று விரிவுபடுத்தி இந்தியா, ரஷியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளை இணைக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். 

இந்த விஷயத்திற்கு சீன எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச அமைப்புகள் மற்றும் மாநாடுகள் போன்றவை உலக அமைதி, வளர்ச்சியை மேம்படுத்தும் வகை, பரஸ்பர நடவடிக்கை போன்றதாக இருக்க வேண்டும்.

சீனாவிற்கு எதிரான வட்டம், தோல்வியை தழுவும்.. வரவேற்பையும் பெறாது என்று சீனா தெரிவித்துள்ளது. இதில் முக்கிய விஷயமாக சீனாவின் நட்பு நாடான ரஷியாவை சேர்ப்பதால் சீனாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனைப்போன்று இந்தியா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளையும் ஜி 7 பட்டியலில் இணைப்பது சீனாவிற்கு வெளியே கூற முடியாத மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America G 7 plan to G 11 china cold angry about it


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->