அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டின் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பு...!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 422,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,887 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

மருத்துவ நிபுணர்களும் இதற்கான மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவில் பரவிய கரோனா வைரஸ் 536 பேருக்கு பரவியுள்ளது. மேலும், 11 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் பலி எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 42,058 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 680 நேற்று ஒரேநாளில் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 2,991 ஆக உயர்ந்துள்ளது.

இதனைப்போன்று அமெரிக்காவில் 54,808    பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 222 பேர் பலியாகினர். இதனால் அமெரிக்கா நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான நபர்களின் எண்ணிக்கையும் 775    ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டிலும் நேற்று ஒரே நாளில் 240 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america France Spain peoples death quantity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->