கண்காணிப்பு வலையில் சிக்கியுள்ள சீனா.. மைக் பாம்பியோ பேச்சு.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு முறைகளை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. அமெரிக்காவின் நட்பு நாடுகளும் இதனை எதிர்த்து நிற்கும். இமயமலை முதல் வியட்நாம் வரை சீனா அத்துமீறி வருகிறது. 

டிக் டாக் செயலியை பொறுத்த வரையில் அமெரிக்கர்களின் தகவல்கள் மற்றும் தனிஉரிமையை பாதுகாக்க உறுதியுடன் இருக்கிறோம். விரைவில் மற்றம் ஏற்படும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பல முறை தொடர்புகொண்டு பேசினேன்.

சீனா நம்ப இயலாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளை அத்துமீறி மேற்கொண்டது.. இந்தியர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளனர்.. சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்களின் இறையாண்மை எங்கு முடிகிறது என்பதை அறிந்தும், அதனை மீறி செயல்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை தன்மையை மக்கள் புரிந்துகொள்வார்கள். 

சீனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிகழ்வை முன்புவிட அதிகமாக அமெரிக்கா கவனித்து வருகிறது. கொரோனா விவகாரத்தில் உலக நாடுகளுக்கு சீனா துளியளவு கூட உண்மை தன்மையுடன் செயல்படவில்லை. கொரோனா விவகாரத்தில் சீனா கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America External affair Secretary Mike Pompeo speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->