சட்டவிதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும்.. சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சீனாவின் பல நடவடிக்கைகள் அண்டை நாடுகளுக்கு பெரும் துயராகவும், பெரும் பிரச்னையாகவாவும் வந்து சேருகிறது. தனது ஆளுமை மற்றும் அடாவடிப்போக்கை உலகம் காண வேண்டும் என்று எண்ணி, அண்டை நாடுகளை பலவகையான முறைகளில் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 

அண்டை நாடுகளை துன்புறுத்துதல், எல்லைகளை ஆக்கிரமிப்பு செய்தல், மக்களை துன்புறுத்துதல், சர்வதேச விதிமுறைகளை மீறுதல், உளவு பார்ப்பது என்று பல விஷயத்தை செய்து வரும் சீனாவின் மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. 

சீனா நாடுகளை ஆக்கிரமிப்பு செய்தது போதாதென்று, தென்சீன கடலில் இருந்து சர்வதேச எல்லை வரை உரிமை கொண்டாடி வருகிறது. இதுபோன்ற பல விஷயத்திற்கு அமெரிக்கா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையையும் பதிவு செய்து வருகிறது. இருநாடுகள் உறவில் பல விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மைக் பாம்பியோ, தென்சீன கடல் பகுதி சீன சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டவை கிடையாது. சர்வதேச விதிகளை மீறி, சுந்தந்திர நாடுகளை மிரட்டி வருவது சரியானதல்ல.. சீன கடல் தொடர்பான பிரச்சனைகள் சர்வேதேச சட்டத்தின் மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America External Affair Minister Mike Pompeo says about SCC


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->