உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகளை வழங்க அமெரிக்கா முடிவு.!! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதினோரு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய தாக்குதலை சமாளிக்க மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் உதவி வருகின்றன.

இருப்பினும் ரஷ்யப்படைகள் உக்ரைனின் நான்கு மாகாணங்களை கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதைத்தொடர்ந்து ரஷ்யாவின் ஏவுகணைகளை சமாளிக்க மேற்கத்திய நாடுகளிடம் பீரங்கிகள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பீரங்கிகளை அனுப்பி வைப்பதுடன், உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சியளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America decided to deliver 31 Abrams cannons to Ukraine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->