யூத முறைப்படி அமெரிக்க தம்பதிகளுக்கு, அராப் எமிரேட்ஸில் டும்.. டும்... டும்..! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து இருதரப்பு சார்பாகவும் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து, விசா நடைமுறைகள், பொருளாதாரம், வர்த்தகம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முதல் முறையாக யூத முறைப்படி திருமணம் அமீரகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. துபாயில் செயல்பட்டு வரும் நட்சத்திர விடுதியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சார்ந்த தம்பதி இருந்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்ய முன்னதாகவே திட்டமிட்டு இருந்த நிலையில், யூத முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து அமெரிக்கா தம்பதிகளுக்கு யூத முறைப்படி திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் 150 பேர் கலந்துகொண்டுள்ள நிலையில், யூத முறைப்படி அன்பை பரிமாறிக்கொண்டனர். யூத முறையில் தம்பதிகள் கைக்குலுக்குவது, கட்டியணைப்பது மற்றும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Couple Marriage in Arab Emirates according to Jewish custom


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->