கொரோனா தடுப்பூசி வந்ததை, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடும் அமெரிக்கன்ஸ்.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கமானது, உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகளே இல்லை என்பதை போல, 214 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டது. 

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டதன் எதிரொலியாக, பல நாடுகளில் தடுப்பூசி தையறிவுள்ளது. பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரானா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வருடமாக மிகுந்த மன இறுக்கத்துடன் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், தடுப்பூசி வந்ததை ஆர்ப்பாட்டமாக கொண்டாடி மகிழ்ந்த வீடியோவானது வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மெடிக்கல் சென்டரில் மருத்துவ பணியாளர்கள் பைசர் நிறுவனத்தின் முதலாவது தடுப்பூசி பார்சல் வந்தவுடன், தனிமனித இடைவெளியுடன் தங்களது ஆர்ப்பாட்டமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மருத்துவ வளாகத்திற்குள் எடுத்து சென்றனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

நமது ஊர்களில் திரைப்படங்கள் ரீல் பெட்டிகளில் வரும் போது, ரசிகர்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் மற்றும் ஆரவாரத்துடன் எடுத்து வரப்படும். அதனைப்போன்றதொரு நிகழ்வு நீண்ட வருடத்திற்கு பின்னர் கொரோனா தடுப்பூசி மருந்து பெட்டிக்கு கிடைத்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Corona Vaccine Medical Employees Dance and Welcomes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->