அமெரிக்கா - சீனா இடையே மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்.. அமெரிக்காவின் அதிரடி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் துவக்கத்தில், சீனாவின் உள்ள யூகான் ஆய்வகத்தில் இருந்து வேண்டும் என்றே உலகிற்கு கொரோனாவை பரப்பியதாக பல தகவல் வெளியான நிலையில், அமெரிக்கா கடுமையாக சீனாவை எதிர்த்து வந்தது. 

இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். மேலும், அமெரிக்காவில் உள்ள தூதரகம் வாயிலாக பல்வேறு உளவு செயல்களை செய்ததாக சீன நாட்டின் தூதரகமும் மூடப்பட்டது. 

சீன ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நபர்களுக்கும் விசா வழங்க முடியாது என அமெரிக்கா அறிவித்த நிலையில், கம்யூனிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கும் விசா தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி பணித்துறை அதிகாரிகள் உடல் ரீதியிலான வன்முறை, தனி நபர் தகவலை திருடி வெளியிடுதல், உளவு வேலை, போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறி சீனர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை ட்ரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Condition for China Peoples Applying Visa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->