இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் - அமெரிக்காவின் சி.ஐ.ஏ பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் தேசிய உளவு கவுன்சில் தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இது குறித்த அறிக்கையில், " இந்தியாவில் கடந்த காலத்தைப் போலவே, பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இரண்டு நாடுகளுக்கு இடையேயான சிக்கலால், பதற்றம் அதிகரித்து போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையே எந்த சூழலிலும் போர் ஏற்படலாம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இது நடைபெறும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பாகிஸ்தான் இராணுவமும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் உளவு அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே பாகிஸ்தானின் அராஜக செயல்பாடுகளுக்கு பதில் தாக்குதல் தகுந்த முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போல் சூழ்நிலை இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் இருப்பதாகவும், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அறிக்கை அளித்துள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America CIA Says about India Pakistan War Shortly 14 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->