இறுதி நேரத்தில் வசமான ஆப்படித்த அமெரிக்கா.. சோகத்தில் சோகம்.! - Seithipunal
Seithipunal


தென்சீன கடலில் நிலவும் பதற்றம், வர்த்தகம், தொழில்நுட்பம், ஹாங்காங் பிரச்சனை போன்ற காரணத்தால் அமெரிக்காவும் - சீனாவும் பகைநாடுகளாக மாறி வருகிறது. இதனால் அமெரிக்காவிற்கும் - சீனாவிற்கும் இடையே பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகிறது. 

சீன இராணுவத்திற்கு சொந்தமாக உள்ள அல்லது சீன இராணுவம் கட்டுப்படுத்தும் சீன நிறுவனங்களின் மீது அமெரிக்காவை சார்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். 

இது தொடர்பாக சில சீன நிறுவனத்தின் பெயர்களை பட்டியலிட்டு, அந்த நிறுவனத்திற்கு சீன இராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக பெண்டகன் தெரிவித்தது. அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டது. 

இந்த வரிசையில் தற்போது சீனாவின் அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, விமான தயாரிப்பு நிறுவனம் கோமேக் உட்பட 9 நிறுவனங்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், நவம்பர் 11 ஆம் தேதிக்குள் முதலீடை திரும்ப பெற வாய்ப்பு வழங்கப்பட்டது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America China Issue America Banned China Company


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->