டைப் 1 நீரிழிவு நோயால் 16 மாத குழந்தை பாதிப்பு.. பெற்றோர்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை கொடுத்த தாய்.! - Seithipunal
Seithipunal


டைப் 1 நீரிழிவு நோயைக் குழந்தையிடம் கண்டறிந்த தாய், ஈரமான டயப்பர்கள் குறித்து பிற தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா சாக்ரமென்டோவைச் (Sacramento, California) சேர்ந்த கர்ட்னி மூர் (Courtney Moore). இவரது கணவர் ஜேசன் (Jason). இவர்கள் இருவருக்கும் 16 மாதமாகும் மடோக்ஸ் (Maddox) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ட்னி மூர் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தனது மகன் ஒவ்வொரு காலையிலும் ஈரமான டயப்பர்களை ஊறவைத்து எழுந்திருப்பதை கவனிக்கத் தொடங்குகிறார். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் அந்த 16 மாத குழந்தை, காலை நேரங்களில் அதிகளவு தாகத்துடன் எழுவதை வழக்கமாக வைத்துள்ளான். 

மேலும், சிறுவன் எழுந்ததும் மிகவும் மூர்க்கமாக தாகமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், இது தொடர்பாக இணையத்தில் தேடுகையில் சிறுவனிடம் இருந்த அறிகுறிகள் டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்பதை தெரியப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தனது மகனை பயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். 

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு, உடனடியாக குழந்தையை அவசர சிகிச்சை அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். வெளியே வந்த மருத்துவர் குழந்தையின் சர்க்கரை அளவு கிட்டத்தட்ட 700 என்ற அளவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். பொதுவாக, குழந்தைகளுக்கு சாதாரண இரத்த சர்க்கரை அளவு 100 முதல் 180 வரை இருக்கும். குழந்தைக்கு 700 அளவில் இரத்த சர்க்கரை என்ற இரத்த குளுக்கோஸ் அளவு இருப்பதை கேட்டு தாயார் மூர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

உடனடியாக சிறுவனுக்கு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களுக்கு பின்னர் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். பிற தாயார்களும், பெற்றோர்களும் இதனை தவிர்க்க அவர்கள் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும், தங்களது குழந்தைகள் அனுபவிக்கும் அரைகுறையாய் புறக்கணிக்க வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகின்றனர். மேலும், எங்களது குழந்தைக்கு கிடைத்த அதிஷ்டம் பிற குழந்தைகளுக்கும் கிடைக்காது எனவும் அறிவுரை வழங்குகின்றனர்.

டைப் 1 நீரிழிவு நோய் அறிகுறியாக அதிகப்படியான தாக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீர் எடை இழப்பு, வறண்ட வாய், சோர்வு, உடல் பலவீனம், அதிகரிக்கும் பசி, உடலில் தோன்றும் சில எதிர்பாராத வெட்டுக்காயங்கள் போன்ற அறிகுறிகள் போன்றவற்றை தெரிவிக்கின்றனர். அமெரிக்காவை பொறுத்த வரையில் டைப் 1 நீரிழிவு நோயால் வாழ்ந்து வரும் நிலையில், இதில் 20 வயதுக்கும் கீழ் 2 இலட்சம் பேர் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை கவனிக்காமல் விட்டால் நரம்பு பாதிப்பு, சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America California Mother shares his 16 Month Baby Son Affected Type 1 Diabetes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->