#BigBreaking: அமெரிக்காவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 8.2..! சுனாமி எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் நிலநடுக்கம் தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, நேபாளம் போன்ற பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் பெரிவிலே (Perryville) பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2, 7.6 ஆக பதிவான நிலையில், இருமுறை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி வீதிகளில் தஞ்சம் புகுந்த நிலையில், சேதங்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருப்பதால் சேதம் அதிகளவு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். 

மேலும், கரையோர மக்கள் உடனடியாக உயரமான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு, மக்கள் அவசர கதியில் கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Alaska Perryville Heavy Dangerous Earthquake Tsunami Warning Announced


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->