அலாஸ்கா நிலநடுக்கத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.. குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய தாய்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் பெரிவிலே (Perryville) பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2, 7.6 ஆக பதிவான நிலையில், இருமுறை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி வீதிகளில் தஞ்சம் புகுந்த நிலையில், சேதங்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.  சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மேலும், கரையோர மக்கள் உடனடியாக உயரமான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு, மக்கள் அவசர கதியில் கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அலாஸ்காவில் உள்ள வீட்டில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் குழந்தையுடன் இருந்த பெண்மணி, நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அவசர கதியில் குழந்தையை தூக்கிக்கொண்டு கதவு அருகே செல்கிறார். அந்த பெண்மணி வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாரா? என்பது தொடர்பான விபரங்கள் இல்லை. 

வீட்டில் இருந்த கேமராவும் நிலநடுக்கத்தின் அதிர்வால் குலுங்கி கீழே விழுந்துவிடுகிறது. இந்த காட்சிகள் மட்டுமல்லாது மக்கள் மேடான பகுதிகளுக்கு கார்களில் விரைந்து செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. அங்குள்ள யாருக்கும், எதுவும் ஆகக்கூடாது என பலரும் அவர்களுக்காக பிரார்த்தித்து வருகின்றனர்.

திருத்தம்: வீட்டில் குழந்தையுடன் இருந்த பெண்மணி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் 2018 அலாஸ்கா நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் என்று தெரியவந்துள்ளது.. பிற வீடியோ பதிவுகள் அனைத்தும் தற்போது உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகள் கீழ் உள்ளவை.. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Alaska Perryville Earthquake Mom Getting Out from House with Child House CCTV Footage Leaked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->