பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எப்-16 என்ற போர் விமானங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ உதவிகள் வழங்குவதை அமெரிக்காவின் முந்தைய அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது ஜோ பைடன், போர் விமானம் வழங்க ஒப்புதல் வழங்கியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 'பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்க இருப்பதற்கு தெரிவிக்கும் காரணத்தை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எப்-16 என்ற விமானம் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று எல்லோருக்கும் தெரியும்.

தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காகவே பாகிஸ்தான் நாட்டிற்கு போர் விமானம் வழங்க ஒப்புதல் அளித்ததாக, அமெரிக்க அரசு தெரிவித்ததை ஏற்க முடியாது. இது மாதிரி காரணங்களைத் தெரிவித்து அனைவரையும் முட்டாளாக்க வேண்டாம்' என்று தெரிவித்திருந்தார்.

இது தொடரபாக, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் தெரிவித்ததாவது, "இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுப்பிடைய நட்பு நாடுகள் தான். இந்த இரண்டு நாடுகளுடன் இருக்கும் எங்களது உறவுகளை நாங்கள் இணைத்துப் பார்க்க விரும்பவில்லை.

நாங்கள் இரு நாடுகளுடனும் இருக்கும் நட்பின் அடிப்படையில் அனைத்து வளங்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொள்கிறோம். ஆனால், இரண்டு நாடுகளுக்குமிடையே எங்களது நட்பு தனித்துவமானது தான்" என்று அவர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america agree to pakistan in fighter jets


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->