5 ஆண்டுகள் கோமாவில் இருந்த கணவர் கண்விழித்து, மனைவியிடம் சொன்ன வார்த்தை..!! - Seithipunal
Seithipunal


சீனாவில் 5 ஆண்டு காலமாக கோமாவில் இருந்த தன் கணவரை 24 மணிநேரமும் தூங்காது இரவு பகல் பார்க்காமல் கணவனை பார்த்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்கிறது.

சீனாவின் ஹூபே பிராந்தியத்தில் குடியிருந்து வரும் லி என்பவருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்கு மூலையில் கடுமையான காயம் ஏற்பட்டு இதன் காரணமாக அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவரை வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டாள் குணப்படத்திவிடலாம் என்று கூறினார்கள். அதன்படி அவன் மனைவி மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டனர். அவர் கண்டிப்பாக குணமாகிடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தார் அவர் மனைவி.

ஒருநாளைக்கு 20 மணி நேரமும் கணவனை மட்டுமே பார்த்து கொண்டு அவள் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்குவாள். இந்த நிலையில் திடீரென்று ஒருநாள் சுய நினைவுக்கு திரும்பிய லீ, தமது 57 வயது மனைவியிடம், ஐ லவ் யூ என கூறியுள்ளார்.

கோமா நிலையில் இருந்து லீ பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம் எனவும், இதே நிலையில் மட்டுமே இனி எஞ்சிய காலம் அவர் இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அக்கறையுடன் பார்த்துக்கொண்டாள் ஒருவேளை வாய்ப்பு இருக்கு இருந்தாலும் அரிது தான் என்று கூறினார். அவர் கூற்றை பொய்யாக ஆக்க வேண்டும் என்றே தாம் உழைத்ததாக கூறும் 57 வயதான ஜாங்  கித்துத்தான்.

அவர் படுத்திருந்த படுக்கை அருகே இருந்து தாம் இந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட விலகியது இல்லை எனவும், அவருக்கு பிடித்தமான பாடல்களை இசைக்கவிட்டபடி, அவர் பேசவில்லை என்றாலும், அவருடன் பேசிக் கொண்டே நாட்களை கடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஜாங் கித்துத்தான்  இந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கிலோ அளவுக்கு உடல் எடை மெலிந்துள்ளார். சகஜ நிலைக்கு லீ திரும்பினாலும், மருத்துவ சிகிச்சை தேவை என்பதால் தற்போது அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After 5 years A husband in a coma winked and said to his wife ..


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->