ஆப்கானிஸ்தானில் இருதரப்பு மோதல்... 13 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2001 ஆம் வருடம் முதலாகவே உள்நாட்டுப்போரானது நடைபெற்று வருகிறது. இந்த போரின் காரணமாக அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பல பிரச்சனை நடித்து வருகிறது. 

மேலும், அந்நாட்டில் இருக்கும் பல நகரங்களில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க நேட்டோ படைகள் உதவி செய்து வந்தது. 

ஆப்கானிஸ்தானில் இருக்கும் பல்வேறு மாவட்டத்தில் கலாசாரத்தை பின்பற்றி வாழும் பலதரப்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒருதரப்பிலும், மற்றொரு தரப்பிற்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள நாங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள டூர் பாபா நாஸ்யான் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் இருதரப்பினரும் இடையே நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் திடீரென மோதல் வெடித்துள்ளது.

இவர்களுக்குள் நடைபெற்ற மோதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan two gang fight due to land problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->