ஆப்கானிஸ்தான்: நீங்க குண்டு போட்டாலும் எங்களின் படிப்பை கைவிடமாட்டோம் - மங்கைகள் வீர சபதம்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் கடந்த 20 வருடமாக நடைபெற்று வரும் நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் - ஆப்கானிய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பயங்கரவாதிகள் அவ்வப்போது அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த மாதம் பயங்கரவாதிகள் பள்ளியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பல மாணவ - மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்த பள்ளியை சார்ந்த மாணவியான பாத்திமா நூரி மற்றும் அவரது வகுப்பு தோழர்கள் படிப்பை தொடர சபதம் செய்தனர். கடந்த மாதம் இவர்கள் படித்து வந்த சமயத்தில் குண்டு வீச்சு சம்பவத்தில் இவர்களை போல பலரின் உயிர் பரிதாபமாக பலியானது. 

பள்ளியில் பயின்று வந்த சிலர் மட்டும் எப்படியோ உயிர் தப்பித்த நிலையில், அந்த வகையில் பாத்திமா நூரி மற்றும் அவரது தோழிகள் ஆகியோர் நாம் படிக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டனர். தங்களின் வகுப்பறைக்கு உள்ளேயே தங்களின் சபதத்தை ஏற்று படிக்க தொடங்கினர். மேலும், அங்கு பயங்கரவாதிகள் பெண்களின் கல்வியை தடை செய்யும் பொருட்டு, பெண் பிள்ளைகள் படிக்க விடக்கூடாது என்று செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் நடந்த தாக்குதலில் சுமார் 85 க்கும் அதிகமான மாணவ - மாணவியர்கள் உயிரிழந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan Fatima Noori learning after their school was bomb Blast Last Month


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->