ஆப்கானிஸ்தானை புரட்டிப் போட்ட பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 1000 தாண்டியது.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 920 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் 1,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், பக்டிகா மாகாணங்களில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan earthquake 1000 peoples death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->