அமெரிக்கா ஆப்கானுக்கு., கட்டிக்கொடுத்த அணையை கைப்பற்றிய தலிபான்..!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் நிலையில், அரசு படைகளுக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் போக்கு நிலவி வருகிறது. பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகிறது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் காந்தகர் மாகாணத்தில் தஹ்லா அணை இருக்கிறது. இந்த அணையை கடந்த 70 வருடத்திற்கு முன்னதாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானிக்கு காட்டிக்கொடுத்தது. மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இரண்டாவது அணை இதுவேயாகும். 

இந்நிலையில், அர்கனதாப் மாவட்டத்தில் இருக்கும் தஹ்லா அணையை நாங்கள் கைப்பற்றிவோட்டோம் என தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூசப் அணையை கைப்பற்றியதை உறுதி செய்துள்ளார்.

தஹ்லா அணை விவசாயிகளுக்கு கால்வாய் பாசனம் மற்றும் காந்தஹார் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணையாக இருக்கும் நிலையில், இதனை கைப்பற்ற பல மாதமாக தலிபான்கள் முயற்சி எடுத்து வந்த நிலையில், தற்போது அணை அவர்கள் வசம் சென்றுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan Dahla Dam Occupy by Terrorist 9 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->