ஆனி திருமஞ்சனத்தில் சிவனை ஏன் வணங்க வேண்டும் தெரியுமா?..! - Seithipunal
Seithipunal


ஆனி திருமஞ்சனத்தில்  நடராசரை  வழிபட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா...?

பிறப்பும் இறப்பும் அற்ற பரம்பொருளான   நடராசருக்கு  உகந்த  தினமாக,  ஆனி உத்திரமான இன்று   (15ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது.

பொதுவாக வருடத்தில் நடராசருக்கு 6 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வது உகந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.


வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும், தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்.  தமிழகத்தில் இருக்கும் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று ஆனித் திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று, சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும்.

இன்று  ஆனி உத்திர தினம் மட்டுமல்ல, முருகப்பெருமானுக்குரிய உரிய சஷ்டி தினமும் வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தினத்தில் காலையில் சிவபெருமானுக்கும், மாலையில் முருகப்பெருமானுக்கும் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு.

பலன்கள் 

ஆனி திருமஞ்சன நாளில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை பெண்கள் தரிசித்தால் சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.

கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும்.

கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aani Thirumanjanam special


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->