துபாயில் கொத்தடிமையாய் துன்பப்பட்ட இளைஞர்!! மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் கிராமம் என்ற ஊரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரது மகன் தங்கவேலு (26) என்பவர் துபாய் நாட்டில் அலுவலக உதவியாளர் பணி எனக் கூறியதன் பேரில் ஏஜென்டின் பேச்சை நம்பி அதற்கான தொகையை செலுத்தி அங்கு வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால். ஏஜென்ட் கூறியபடி அவருக்கு உதவியாளர் பணி வழங்காமல் கட்டுமான பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். மேலும் இரும்பு கம்பிகளை சுமக்கும் மிகவும் கடினமான வேலை கொடுத்து சரியான சம்பளம் வழங்காமல் கெட்டுப் போன உணவை கொடுத்து சாப்பிட சொல்லி அவரை கொத்தடிமை போல் நடத்தி உள்ளனர்.

இதனை தனது வாட்ஸ்அப் மூலமாக வீடியோவில் அனுப்பியிருந்தார் தங்கவேலு. இதனை கண்டு மனம் தளராத பெற்றோர் சில நாட்களுக்கு முன்னர் தங்கள் மாவட்ட கலெக்டரை சென்று மகனை மீட்டுத் தருமாறு தாய் ஆகியோர் கண்ணீர் மல்க மனு கொடுத்து வந்தனர். மேலும் தங்கவேலு உடனடியாக மீட்க படாவிட்டால் அவன் தற்கொலை செய்து கொள்வேன் என அழுகிறான் என கண்ணீர் மல்க அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

உடனடியாக இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் மத்திய அரசின் மூலம் தங்கவேலுவை மீட்க நடவடிக்கை எடுத்தார். அவரின் துரித நடவடிக்கையால் துபாயில் கொத்தடிமையாக இருந்த தங்கவேலு மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வாழ்வா, சாவா என்ற போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தங்கவேலுவிற்கு அரசும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் எடுத்த நடவடிக்கை அவரது உயிரை காப்பாற்றி இருப்பதாக தெரிவித்து கலெக்டர் வீரராகவராவ்  அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் தங்கவேலு. இச்சம்பவம் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man slave in Dubai Action taken by central government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->