நீண்ட கால கொரோனாவால் என் ஆணுறுப்பு அரை இன்ச் சுருங்கிவிட்டது... பீதியை ஏற்படுத்திய நபர்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் உலகளவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், கொரோனாவின் நீண்ட கால பாதிப்பால், மக்கள் 200 வகையான பிரச்சனையால் நீண்ட நாட்களுக்கு அவதிப்படலாம் என ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கொரோனாவின் நீண்ட கால பாதிப்பு காரணமாக, தனது ஆணுறுப்பு சுருங்கிவிட்டதாக நபரொருவர் ட்விட் பதிவு செய்துள்ளார். 

கொரோனா வைரஸை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் அறிகுறிகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. முதற்கட்ட ஆய்வில் உடற்சோர்வு, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, இதயத்துடிப்பு மற்றும் மனசோர்வு, பதற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

ஆணுறுப்பின் அளவு தொடர்பான ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், தொடக்கத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் குறித்த நபர் தனது ஆணுறுப்பு அரை அங்குலம் (1/2 Inch) அளவு சுருங்கிவிட்டதாக தெரிவிக்கவே, அவரது ட்விட்டர் பதிவு பெரும் வைரலாகியுள்ளது. மேலும், இந்த தகவலை யாரிடம் கேட்பது என தெரியவில்லை என்பதால் பொதுவெளியில் பதிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது பதிவில் கொரோனா நோய்த்தொற்றின் போது எனது ஆணுறுப்பு இருந்த அளவை விட தற்போது அது குறைந்துள்ளதை நான் உறுதி செய்தேன். மருத்துவர்களிடம் சென்று கேட்டால் அவர் என்ன நினைப்பார்கள்? அல்லது போட்டோ எடுத்து அளவெடுப்பார்கள் என்ற அச்சம் இருந்தது. இந்த விஷயம் மனசோர்வு தொடர்பானதா? அல்லது நீண்டகால கொரோனா காரணமா? என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இவரது பதிவை கண்ட பலரும் அவருக்கு இன்னும் பல சந்தேகத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், சில நபர்கள் உங்களது உடல் கொழுப்பு அதிகரிப்பு, மோசமான செரிமான பிரச்சனை போன்றவற்றால் இது ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்க, மற்றொரு நபர்கள் 45 வயதாகும் உங்களுக்கு வயது காரணமாக அது ஏற்பட்டு இருக்கலாம் அல்லது மாயையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 

இதுமட்டுமல்லாது, ஒருவர் உங்களுக்கோ திருமணம் முடிந்து, வயதும் ஆகி வருகிறது. அதனால் ஆணுறுப்பின் அளவு குறைகிறது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், கொரோனாவால் ஆணுறுப்பு அளவு குறைகிறதா? என்றால் இல்லை. ஆனால், அதுகுறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. தேவையில்லாத மன பயத்திற்கு யாரும் உள்ளாக வேண்டாம் என்றும் தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Man Fear about Penis Shrinkage After Corona Affect He Doubt its a Long Term Corona Effect


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->