சூரியனில் ஏற்பட்ட பிரளயம்.! நாசாவுடன் சேர்ந்து எச்சரிக்கையை விடுத்த கொடைக்கானல் ஆராய்ச்சி மையம்.!! பூமிக்கு வரும் காந்தப்புயல்.!! - Seithipunal
Seithipunal


நமக்கு தினமும் வெளிச்சத்தையும்., உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை வழங்கும் சூரியனில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் காரணமாக சில மாறுதல்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்., சூரியனில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக., அதில் இருக்கும் கரும்புள்ளிகள் வழக்கத்தை விட பெரியதாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக சூரிய காந்த புயல் ஏற்ப்படவுள்ளதாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வான் இயற்பியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்து சூரியனில் ஏற்படும் காந்தப்புயல்கள்., கரும்புள்ளிகள் மற்றும் கதிர்வீச்சுகள் குறித்த ஆய்வானது நடைபெற்று வருகிறது. 

சூரியனில் சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் கரும்புள்ளிகள்., தற்போது கடந்த வாரத்தில் ஏற்படுவதாக ஆய்வகத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2007 ம் வருடத்தில் ஏற்பட்டு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்த கரும்புள்ளிகள் பூமிக்கு வட மற்றும் தென் துருவங்களில் வந்தடையும் என்றும்., இதனால் வெப்ப நிலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.  

மேலும்., தற்போதுள்ள சூழ்நிலையில் 25 சுழற்சியில் தொடர் புள்ளிகள் உருவாகுவதால் சூரிய காந்த புயல் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும்., இதனால் தொலைத்தொடர்பு பாதிப்படையலாம் மற்றும் செயற்கைகோள்களின் செயல்பாட்டில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்., இந்த சூரிய காந்தப்புயல் குறித்த வீடியோ காட்சிகளை நாசா வெளியிட்ட நிலையில்., நமது ஆராய்ச்சி மையத்தின் மூலமாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a magnetic sun storm was coming earth after 12 years gap


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->