நீரில்லாமல் 4 வருடங்கள் பூமிக்கடியில் காத்திருந்து மழை வந்தவுடன் துள்ளிக்குதித்து வரும் மீன்.! அற்புதமான ஆய்வு வீடியோ காட்சிகள்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நாம் இணைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறோம். உலகம் உள்ளகையில் என்ற பழமொழிக்கு ஏற்ப நமது கைகளில் இருக்கும் அலைபேசியின் செயலிகள் வழியாக நாம் உலகின் பல்வேறு இடத்தில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொண்டு வருகிறோம். 

அந்த வகையில்., இந்த உலகை சுற்றி பல விசித்திரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இறைவனின் படைப்பில் உள்ள பல மகத்துவங்களை இன்றளவும் உள்ள பரிணாம வளர்ச்சியின் ஆராய்ச்சி முடிவுகளால் கூட விளக்கம் தரமுடியவில்லை என்பது தான் உண்மை. 

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சில பகுதிகள் பாலைவனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த பகுதிகளில் வருடத்தில் மழையளவு என்பது மிகமிக குறைந்த அளவே காணப்படும். எகிப்தில் இருக்கும் நைல் நதியின் மூலமாக ஆப்ரிக்க நாடுகளின் சில பகுதிகளில் பாலைவனத்தின் வழியாக தண்ணீர் செல்கிறது. 

இந்த பகுதியில் தண்ணீர் சென்று முடிவடைந்த பின்னர் அங்குள்ள மீன்கள் எல்லாம் இறந்துவிடும் என்று எண்ணியிருப்போம். ஆனால் அதற்க்கு மாற்றாக ஒரு மீன் சுமார் நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை தரையில் நீரில்லாமல் உயிருடன் இருந்து., பின்னர் மழை நன்றாக பெய்து மண் குளிர்ந்த நேரத்தில் மீண்டும் வருகிறது.

அங்குள்ள பகுதிகளில் இருக்கும் லங் பிஷ் (lung fish ) என்று அழைக்கப்படும் மீனானது உயிருடன் திரும்பி வருகிறது. இது குறித்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் தற்போது வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. மேலும்., இதனை தொடர்ந்து மண்ணுள் இருந்து வரும் மீனையும் காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a lung fish special video trending on social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->