அம்மாடியோவ்...... ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்.! உலகை வியக்க வைத்த இரண்டாவது பெண்.!!  - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டில் இருக்கும் கிழக்கு ஈராக் பகுதியில் உள்ள தியாலி மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையில் 25 வயதுடைய பெண் தனது ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு மொத்தம் 6 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆன் குழந்தை என்று அனைத்து குழந்தைகளையும் சுக பிரசவத்தில் பெற்றெடுத்த சம்பவம் அங்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரசவ வலி ஏற்பட்டு பெண் துடித்து கொண்டு இருப்பதை கண்ட கணவர்., மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுக பிரசவத்திற்க்காக காத்திருந்தனர். 

அந்த நேரத்தில் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்படவே., ஒரே பிரசவத்தில் சுமார் 7 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதனையடுத்து அந்த குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும்., அந்த பெண்ணிற்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்த விஷயம் குறித்து குழந்தைகளின் தந்தை தெரிவித்ததாவது., இப்போதே 10 குழந்தைகள் ஆகிவிட்டது., இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கவனித்து கொண்டு அவர்களை வளர்க்க வேண்டும். இதற்கு மேல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் எண்ணம் எதும் இல்லை என்று தெரிவித்தார். 


இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது., சுக பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்றெடுத்து இரண்டாவது முறையாகும்., இதே போன்று அமெரிக்காவில் இருக்கும் கென்னி-பாப்பே  தம்பதியினருக்கு 1997 ம் வருடத்தின் போது 7 குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் மாதத்தில் தங்களின் 21 வது பிறந்த நாள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.  

English Summary

a lady delivery 7 babies in once pregnant in Iraq


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal