வயிறு வீங்கி, வருடக்கணக்காக அவதியுறும் பெண்மணி.. கண்ணீர் பேட்டி.!!
a girl face problem stomach increase
சீன நாட்டில் உள்ள ஹுவாங் குவாஸ்கின். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், இவரது வயிறு திடீரென வீங்கிக்கொண்டே சென்றுள்ளது. இவரது எடையும் 121 பவுண்ட்டாக மாறியுள்ளது.
மேலும், 44 பவுண்ட்டாக வயிறு மட்டும் எடையை கொண்டுள்ள நிலையில், கடந்த 2 வருடமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், வயிறு பெரிதாகி அதிகளவு வலி ஏற்படுவதாகவும் இப்பெண்மணி தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தடோரப்பாக அங்குள்ள ஹூவாங் மருத்துவமனையின் உதவியை நாடிய சமயத்தில், மருத்துவர்கள் வலியை குறைக்க மருந்து தந்துள்ளனர். ஆனால், வயிறு வீக்கம் மட்டும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றுள்ளது.
இவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனையில் செய்கையில் கல்லீரல் நோய், கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி ஏற்படுதல், அடிவயிறு மற்றும் மார்பு பகுதிகளில் தேவையற்ற திரவம் சுரப்பது போன்ற பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால், ஏன் வயிறு பெரிதாகிறது என்பதை மருத்துவர்களால் கண்டறிய இயலவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக ஹூவாங் தெரிவிக்கையில், " வயிறு இவ்வாறு வீங்கியிருப்பதால் சரியாக தூங்க இயலவில்லை. எனது குழந்தைகளை கவனிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தெருவில் நடந்து செல்கையில் கர்ப்பிணி பெண்கள் என்று எண்ணுகிறார்கள்.. நான் விரைவில் நலம்பெறுவேன் என்று நம்புகிறேன் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
a girl face problem stomach increase