இரவோடு இரவாக திடீரென இடிந்த அணை.! ஊருக்குள் புகுந்த வெள்ளம்., 200 க்கும் மேற்பட்டோர் மாயம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் உள்ள பெலோ ஹாரிசன்டே நகருக்கு தென் மேற்காக அமைத்துள்ளது புருமடின்ஹோ நகரம்.  இந்த நகருக்கு அருகில் இருக்கும் பகுதியில் இருப்பு தாது சுரங்கமானது செயல்பட்டு வந்தது. இந்த பகுதிக்கு அருகில் பழைய அணையானது பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து வந்தது. 

அங்கிருந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில்., உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை திடீரென அணையானது இடிந்து அதில் உள்ள நீரெல்லாம் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்த சம்பவத்தில் அணையில் இருந்த நீர் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடி., அங்குள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகளில் புகுந்து ஓடியது. இந்த விபத்தில் அங்கிருந்த பாலங்கள்., இல்லங்கள் மற்றும் வாகனகினால் மண்ணில் புதையுண்டன. 

சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சுமார் 100 பேர் வரை கைப்பற்றப்பட்ட நிலையில்., 7 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாகவும்., சுமார் 200 பேரை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை ஹெலிகாப்டரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., அந்நாட்டு அதிபர் மற்றும் இராணுவ மந்திரி அங்குள்ள பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தை காண இன்று செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a dam collapsed in Brazil country 200 members missing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->