சிவில் இன்ஜினியர்னா இப்படி தான் இருக்கணும்.! வித்தியாசமாக ப்ரபோஸ் செய்த காதலர்.!  - Seithipunal
Seithipunal


தன்னுடைய காதலியிடம் காதலை வெளிப்படுத்த சிவில் இன்ஜினியர் ஒருவர் சரியான இடம் ஒன்றை தேடினார். தான் ஒரு சிவில் இன்ஜினியர் என்பதன் காரணமாக தனக்கு பிடித்த இடம் ஒன்றை தேர்வு செய்தார். நியூ ஹாம்ப்ஷயரின் போர்ட்ஸ்மவுத்தில் உள்ள மெமோரியல் பிரிட்ஜ் தான் அவர் தேர்வு செய்த இடம்.

தன்னுடைய காதலியை இந்தப் பாலத்திற்கு தனியாக அழைத்துச் சென்ற பின்னர் பாலத்தை எவ்வளவு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கி நிறுத்தினார். அதன்பின்னர் காதலின் முன்னே கீழே மண்டியிட்டு மிகவும் அழகாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

அவர் காதலை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிய காதலி உடனடியாக சம்மதத்தைத் தெரிவித்தார். இதுகுறித்து அந்த நகரின் போக்குவரத்து துறை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டது. அதில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருந்தது. 

மேலும், "இருவரும் நினைவு பாலத்தின் மீது தங்களுடைய காதலை பகிர்ந்து கொள்கின்றனர். இருவரும் பல்வேறு பிரிவுகளில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். பாலம் பராமரிப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு அழகான காதல் ஜோடியை சேர்த்து வைப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே." என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A civil engineer proposing his lover on bridge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->