உரம் போட்டு வளர்த்ததில் நேர்ந்த விபரீதம்.! அதீத சக்தியால் ஆளுயரம் வளர்ந்து நின்ற வினோதம்.!!  - Seithipunal
Seithipunal


மேலை நாடுகளில் இருக்கும் கொண்டாட்டங்களில் ஒன்று காய்கறிகளை உரம் மற்றும் அதற்கு தேவையான பொருட்களை போட்டு அதிக எடையுள்ளதாக மற்றும் பார்ப்பதற்கு வித்தியாசமான காய்கறிகளை வளர்த்து., நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றி பெரும் போட்டிகளை நடத்துவது வழக்கம். இந்த போட்டிகளை 90 கிட்ஸ் மிஸ்டர்.பீன் நகைச்சுவை கார்டூனில் கண்டு வியந்த நாட்கள் இருக்கிறது. 

இந்நிலையில்., ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரோஸ்மேரி நார்வுட் மற்றும் சென் கேட் மேன் தம்பதியினர் பெரிய அளவிலான முட்டை கோஸை வளர்த்து சாதனை புரிந்துள்ளனர். 

ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் ஜெக்கீஸ் மார்ஷ் பகுதியில் வசித்து வரும் இவர்கள் இருவரும் காய்கறிகளை விளைவித்து விற்பனை செய்யும் பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பெரிய அளவிலான காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. 

இதனையடுத்து ஆசையை நிறைவேற்றுவதற்காக கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் பெரிய அளவிலான முட்டை கோஸை வளர்க்க முடிவு செய்து வளர்ந்து வந்துள்ளனர். சுமார் 9 மாதங்கள் கழித்து இவர்களின் முட்டைக்கோஸானனது ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்து இருக்கிறது. 

இந்த புகைப்படத்தை வெளியிட்ட இவர்கள்., பெரும் முயற்சிக்கு பின்னர் எங்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டோம் என்று இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

English Summary

a big giant-cabbage in Australia developed in garden


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal