கோஸ்டா ரிகா || கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பேருந்து விபத்து.! 9 பேர் பலி - Seithipunal
Seithipunal


மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கோஸ்டாரிகாவின் அலாஜுவேலா மாகாணத்தில் உள்ள எல் ஹண்டிமியெண்டோ என்ற மலைப்பாதையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மற்றும் இரண்டு வாகனங்கள் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து சென்ற அவசர கால உதவியாளர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 55 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் கன மழைதொடரும் என்று கோஸ்டாரிகா தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 died in bus accident due to landslide in costa rica


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->