இருமல் மருந்தால் பறிபோன 66 பிஞ்சுகளின் உயிர்.. தமிழகத்தில் ஆய்வை தொடங்கிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இரும்பல் மற்றும் சளிக்கான மருந்துகளை சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. அந்த மருந்துகளை சாப்பிட்டதால் கடுமையான சிறுநீரக பாதிப்பால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

குழந்தைகளின் இறப்பிற்கு காரணமான நான்கு வகை இருமல் மற்றும் சளி மருந்துகள் இந்தியாவின் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் உலகம் சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த மருந்தினால் ஏற்பட்ட பாதிப்பு காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும் அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். எனவே குறிப்பிட்ட அந்த மருந்துகளை விற்பனையிலிருந்து நீக்குமாறு உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை விடுத்தது. உலக சுகாதார அமைப்பு பக்கத்தில் இது சம்பந்தமான பதிவு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான மைடன் பார்மாசூட்டிகல்ஸ் (MaidenPharmaceuticals) நிறுவனத்தின் தயாரிப்புகளின் பாதிப்பை தொடர்ந்து, மத்திய மருந்து கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தமிழகம் முழுவதும்  ஆய்வு தொடங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

66 babies death eaten Cough strap and The officers start Infection in Tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->