6,500 பயங்கரவாதிகள் சொந்த நாடுவிட்டு, அண்டை நாட்டில் அட்டூழியம்.. ஐ.நா பகீர்.!! - Seithipunal
Seithipunal


கேரள, கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இந்தியா, பாக்கிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் பகுதிகளில் 150 முதல் 200 அல் கொய்தா பயங்கரவாதிகள் உள்ளூர் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும், ஐ.எஸ், அல்-கொய்தா தொடர்பான தீவிரவாத கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள 26 ஆவது அறிக்கையின் படி, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இந்திய துணை கண்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிம்ர்ஸ், ஹெல்மாண்ட், கந்தகார் பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 பயங்கரவாதிகள் முதல் 200 பயனராவதிகள் வரை இருக்கின்றனர். இவர்கள் கர்நாடகா, தமிழகம், கேரள மாநிலங்களில் இருக்கும் தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், இந்த தாக்குதல் பெரிய அளவில் நடத்தப்படலாம் என்பதால் தகுந்த முன்னெச்சரியுடன் செயல்படுமாறும் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்கிஸ்தான் நாட்டினை சார்ந்த பயங்கரவாதிகள் 6000 பேர் முதல் 6500 பேர் வரை இருக்கின்றனர் என்றும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, அல்-கொய்தா, ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் போன்ற பல குழுக்களுடன் சேர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாகவும், ஆப்கானிஸ்தானில் இறந்த பல நபர்களில் பாக்கிஸ்தான் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் ஐநா அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6500 Pakistan terrorist works at Afghanistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->