பருவமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி.. தீவிரம் அடையும் மீட்பு பணி..! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டை போலவே கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவிலும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையினால் கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கரமான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் தான் பொதுமக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள், இந்த நிலையில் அங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் வரையில்  உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், விடாமல் கொட்டி தீர்க்கும் மழையினால் அந்த பகுதியில் இருக்கும் சாலைகள், பாலங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதிகளில், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொகோட்டா மாவட்ட ஆணையர் அபோலோ தெரிவித்துள்ளார்.

மேலும், நிலச்சரிவில் சிக்கிக் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இதன் இடையே, நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு ராணுவத்துறை, காவல் துறை ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்படக்குடிய அபாயமான  பகுதிகளை விட்டு பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பு இடங்களுக்கு தஞ்சம் புகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்."


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 death due to land slide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->