மீண்டும் 6 வாரங்களுக்கு ஊரடங்கு.. வெளியான அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. இதனால் மாகாணலுக்களுக்கிடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டுவர வேண்டுமென சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மெல்பேர்ன் நகரில் இன்று முதல் ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியா மாகாணத்தின் ப்ரீமியர் டேனியல் ஆண்ட்ரூ கூறுகையில், இன்று முதல் மெல்பேர்ன் மெட்ரோபாலிடன் பகுதியில் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 

மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும். அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்துவருகிறது. உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது எனக்கூறினார். 

விக்டோரியா மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் பெரும்பாலானோர் மெல்பேர்ன் நகரை சார்ந்தவர்கள். எனவே சமூக பரவல் என்ற நிலைக்கு கொரோனா செல்வதை தடுக்க 6 வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 weeks curfew in melbourne


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->