அமெரிக்கா || கே கிளப்பில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கே கிளப்பில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தின் ஸ்பிரிங்ஸ் நகரத்தில் கே நைட் கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

கே நைட் கிளப்பில் வழக்கம்போல் இரவு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,18 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில். இதையடுத்து பாதுகாப்பிற்காக அப்பகுதியில் சாலை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் சாலையில் அணிவகுத்து இருப்பதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 died in shooting in gay club in america


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->