ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்த 41 தீவிரவாதிகள்! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 19-வது ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள், அந்தநாட்டு  உள்நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த போரினால் பொதுமக்கள் என பலர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே, தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதங்களை கைவிடவும், அரசுக்கு எதிரான போர்க்குணத்தை கைவிடவும், 2010 ஆம் ஆண்டு சமாதான நல்லிணக்க செயல்முறையை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியது. அதற்கு பிறகு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு அரசு எடுத்த நல்லிணக்க செயல்முறையில் இணைந்தனர்.

இந்த நிலையில், டாக்கார் மாகாணத்தின், வார்சாஜ் மாவட்டத்தில் இருந்த 41 தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர்.

இதுதொடர்பாக, ஆப்கானிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  டாக்கார் மாகாணத்தின் உள்ளூர் பெரியவர்கள் மற்றும் போலீஸ் படையினர் எடுத்த முயற்சியின் பலனாக 41 தலீபான் உறுப்பினர்கள் ஆப்கான் தேசிய மற்றும் பாதுகாப்பு படைகளிடம் வார்சாஜ் மாவட்டத்தில் சரண் அடைந்துள்ளனர என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

41 terrorist surrender


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->