வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. பிரதமர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 5,303,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 339,992 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 2,158,510 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,504 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,455 பேர் குணமடைந்துள்ளனர்.  

இந்நிலையில், வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை என நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். வாரத்தில் 3 நாள் என்பது நீண்ட விடுமுறை என்பதால், மக்கள் நாடு முழுவதும் பயணிக்க வழி ஏற்படும், இது சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வழிவகுக்கும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 days work 3 days leave in new zealand


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->