காசு, பணம், துட்டு., ஆயாவுக்கு புருஷன் ஆன வாலிபனுக்கு குவியும் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


தாராளமாக செலவு செய்வதால் 70 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபன் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் 70 வயது பெண் ஒருவரை, கென்ய நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவை சேர்ந்த பெர்னார்ட் முஸ்யோகி என்ற 35 வயது இளைஞருக்கும், அமெரிக்க நாட்டை சேர்ந்த 70 வயது பெண்ணான டிபோரா ஜான் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிக் கொண்டனர்.

பின்னர் இருவரும் நண்பர்களாகி, பின்னர் ஒரு கட்டத்தில் காதலிக்கவும் தொடங்கிவிட்டனர். இதற்கிடையே அந்த இளைஞர் செய்துவந்த வேலை இழந்த காரணத்தினால், அவருக்கான அனைத்து செலவுகளையும் அமெரிக்க பெண் டிபோரா ஜான் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களுக்கு இந்த வருடத் தொடக்கத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் பணத்திற்காக தான் இந்த இளைஞர் அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதனை அமெரிக்க பெண்ணான டிபோரா ஜான் மறுத்துள்ளார். மேலும் அவர் தனது திருமணம் குறித்து தெரிவிக்கையில், 

"நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். அவருக்கு இதில் முழு சம்மதம். நாங்கள் காதலித்தோம். இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். காதலுக்கு வயது கிடையாது. உண்மையான காதலுக்கு வயதும் தடையில்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

35 year old man marriage to 70 yearl old lady


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->