குடியுரிமைக்காக காத்திருக்கும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் குடும்பத்தார் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டு பெறுவதற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காத்துகொண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்பும் மற்ற நாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் குடும்பத்தார் மூலம் கிடைக்கப்பெறும் கிரீன் கார்டு அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு 2,27,000 இந்தியர்கள் காத்திருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போது 40 லட்சம் பேர் குடும்பத்தார் மூலம் கிடைக்கப்பெறும் கிரீன் கார்டுக்கு காத்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் அமெரிக்காவின் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் 15 லட்சம் பேர். அதற்கு அடுத்தபடியாக 2,27,000 இந்தியர்களும், 1,80,000 சீனர்களும் காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 lakh indians waiting for green card


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->