மோசமான வானிலை: ஜப்பானில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஜப்பானில் மோசமான வானிலை காரணமாக கப்பல் மூழ்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டான்ஜோ தீவுகளுக்கும், நாகசாகி பகுதிக்கும் இடையே சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்க தொடங்கியது. இதையடுத்து கப்பலிலிருந்து சிக்னல் உடனடியாக கப்பற்படைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒரு தனியார் கப்பலும், ஜப்பான் ராணுவ விமானமும் மீட்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டது.

இதில் சரக்கு கப்பலில் பயணித்த 22 பேர்களில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 7 பேர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜப்பானின் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக கப்பல் கட்டுப்பாட்டை இழந்து கடலில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died as Ship capsizes in Japan due to bad weather


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->