4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்., கனமழைக்கு வாய்ப்பு!! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால், அந்த மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்தது. கோழிக்கோடு, மலப்புரம்  உள்ளிட்ட  மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலும் வெள்ளம் பாதித்த இடங்களில்  மீட்புப்பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றது. 

கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்ததால் மீட்புப்பணிகள் மிக தீவிரம் அடைந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபகுதிகளான மலப்புரம், கவளப்பாறை பகுதியில் இருந்து நேற்று அனிஷ் (வயது 37), பாலன் (48) ஆகிய 2 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டது. இதுவரை கேரளாவில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. 1791 மேற்பட்டோர் மழையால் தங்களது வீடுகளை முழுமையாக இழந்து தவிக்கின்றனர். 14559 மேற்பட்ட வீடுகள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது, முகாம்களில் தங்கி இருந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பிய வீடுகளுக்கு திரும்பி வருவாதல் கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. தற்போது 13 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கி உள்ளனர். இந்தநிலையில் கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து,  இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட  நான்கு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோலவே இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பலத்த காற்றுடன் மழை பெய்யுமென்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yellow alert for four district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->