தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு கன மழை., வானிலை மையம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தடுத்து பரவலாக  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

இந்தநிலையில், நேற்று நள்ளிரவில் சென்னையில் பல பகுதியில் இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்துள்ளது. குறிப்பாக தாம்பரம், ராயப்பேட்டை, பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர், ஆவடி, மதுரவாயல், மெரினா, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல காஞ்சிபுர மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளது.

இதையடுத்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்புயிருப்பதாகவும், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர், உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்ககளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villupuram tv malai district rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->