வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியது.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தூங்கிய நிலையில், கர்நாடகா, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வாயு புயலாக வலுப்பெற்றுள்ளது. 

இந்த புயல் வடக்கு கூதியை நோக்கி நகர்ந்து தீவிர புயலாக மாறி குஜராத் மாநிலம், போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதிகளில் நாளை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வருகின்ற 13,14ஆம் தேதி குஜராத்தில் கனமழை பெய்யும் எனவும் புயல் கரையை கடக்கும்போது 110 முதல் 120 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும். 

இந்நிலையில், இன்று காலை குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது இன்று இரவுக்குள் அந்த வேகம் 110 முதல் 120 கிலோமீட்டர் வேகமாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற குஜராத் மாநில அரசு  முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

English Summary

vayu cyclone update


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal