திசை மாறிய வாயு புயல்.. வானிலை ஆய்வு மையம் இறுதி எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அரபிக்கடலில் உருவான வாயு புயல் அதி தீவிர புயலாக மாறிய குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

தற்போது இந்த புயல் திசை சற்று மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மேற்கு பகுதியில் உள்ள வேரவல் மற்றும் மேற்கில் உள்ள துவாரகா இடையே இன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த புயல் கரையை கடக்கும்போது 158 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வரை எட்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த அதிதீவிர வாயு புயல் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்காது. இந்த புயலின் திரை மாறியதால் குஜராத்தின் வேரவல் மற்றும் போர்பந்தர் ஆகிய பகுதியை ஒட்டி கடந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vayu cyclone new update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->