தமிழகத்தில் திடீரென, சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் மழை.! மகிழ்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பத்து மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது 

சனிக்கிழமை வரை பல பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேசமயத்தில் சில இடங்களில் வெயிலும் அடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கொடைக்கான‌ல் ந‌க‌ர் ப‌குதிக‌ளில் மித‌மான‌ ம‌ழை பெய்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today rain kodaikanal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->