தமிழக அரசு அலெர்ட் செய்த 4399 இடங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17 ஆம் தேதியான இன்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. 

இந்தநிலையில் அதற்கு முன்பாகவே நேற்று வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதாகவும், இயல்பு பெய்யும் மழையின் அளவை விட இந்தாண்டு கூடுதலாக இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி சென்னனை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் 4399 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்.  

மேலும், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 7,327 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இடி மற்றும் மின்னலில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government alert four thounsand places


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->