தமிழகத்தில் ஒரே நேரத்தில் நிகழப்போகும் இரட்டை மாற்றங்கள்!! பொது மக்களே உஷார்!!  - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் அனல் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெப்பச்சலனம் காரணமாக வேலூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டஙகளில் மழை பெய்யகைகூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட 15 மாவட்டங்களில் நேற்று வெயில் நூறு டிகிரியை தாண்டி பதிவானது. தமிழகத்தில் தற்பொழுது வெப்ப சலனம் நிலவுகிறது. இதனால், கிட்டத்தட்ட 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Image result for வெயில் செய்திபுனல் 

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யகூடும் என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் அதீத வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாதத்தில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில் உச்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது படிப்படியாக வெப்பம் குறைந்து வந்தாலும், வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அப்படியேதான் நீடிக்கிறது. மேலும், வேலூர் மற்றும் திருத்தணியில் நேற்று 110 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளது.

திருச்சி மற்றும் சேலம் பகுதியில் 105 டிகிரியும்,  நாகப்பட்டினம், கரூர், பாளையங்கோட்டை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் 104 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால், வெப்ப சலனம் ஏற்பட்டதன் விளையாவாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu got weather changes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->