மழையால் 100 ஆண்டு கால சாதனை முழுவதும் உடைத்து! தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்றிரவு முதல் சென்னையில் அசோக்நகர், கிண்டி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல்,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வேலூர் மழை 100 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் பதிவு செய்தவை, கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக 1909-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வேலூரில் தொடர்ந்து 24 மணிநேரங்களாக பெய்த மழையின் அளவு 106 மி.மி.ஆகப் பதிவானது. தற்போது ஆகஸ்ட் 16, 2019 நள்ளிரவு தொடங்கி தொடர்ந்து பெய்த மழையின் அளவு 166 மி.மி.களாகப் பதிவாகியுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu weather man post for vellore rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->