இரவில் வெளுத்து வாங்கிய மழை.. குளிர்ச்சியான சூழ்நிலையில் சென்னை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு பெய்ய கூறும் என சென்னை வானிலை யாவு மையம் தெரிவித்தது.

நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. ஆலந்தூர், ஐயப்பந்தாங்கல், போரூர், அம்பத்தூர், மடிப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்தது. 
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சுற்று வட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை.

சென்னையில் ராயப்பேட்டை, கொளத்தூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. ராமாபுரம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->