அடுத்த டார்கெட் இந்த மாவட்டங்கள் தானாம், உஷார்.! வெளியான முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான ,மிதமான மழைக்கும் ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கின்றது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. சென்னையை பொறுத்தவரை 33 செமீ மழை பதிவாகி இருக்கின்றது. இயல்பை விட இது 5 செமீ அதிகம். 

rain seithipunal

மேலும், சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த சங்கமம் இருப்பதன் காரணமாக வேலூர், கிரிஷ்னகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. 

அதிலும், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது." என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain for those district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->